Trending News

திமிங்கிலம் மூலம் மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட வருமானம்

(UTV|COLOMBO) மிரிஸ்ஸ பிரதேசத்தில் திமிங்கிலத்தை பார்வையிடுவதற்காக வருகைதரும் மக்களிடம் 12 நாட்களில் மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட வருமானம் பெறப்பட்டுள்ளது. .

நாளாந்த வருமானம் 30 லட்சம் ரூபாவாகும். கடந்த முதலாம் திகதி தொடக்கம் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான அனுமதி சீட்டை விநியோகிப்பதற்கான பணிகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

உள்ளுர் பார்வையாளர்களிடமிருந்து 150 ரூபா அறவிடப்படுகிறது. வெளிநாட்டுப் பயணிகளிடமிருந்து 15 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுகின்றது. ஒரு மணித்தியால கடற் பயணத்தின் பின்னர் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளாந்தம் காலை 7 மணி தொடக்கம் மிரிஸ்ஸ கடற்றொழில் துறைமுகத்தில் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான படகு புறப்படுகின்றது. தொலைபேசி ஊடாகவும் இதில் ஆசனங்களை ஒதுக்கீடு செய்து கொள்ள முடியும். இதற்கான தொலைபேசி இலக்கம் 0713 121 061 ஆகும் என்று மிரிஸ்ஸ வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.மிரிஸ்ஸ பிரதேசத்தில் திமி;ங்கிலங்களை பார்வையிடுவதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்குவதற்காக 50;ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. சட்ட ரீதியிலானஅனுமதிப் பத்திரத்தைக் கொண்டுள்ள படகுகளில் மாத்திரம் சென்று திமிங்கிலங்களை பார்வையிடமுடியும் என்று மிரிஸ்ஸ வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

All set for free and fair election tomorrow – Elections Commission

Mohamed Dilsad

President’s refusal to appoint legitimate Govt. will affect salaries – UNP

Mohamed Dilsad

பாடசாலை மாணவர்கள் சென்ற பேரூந்து விபத்து – ஐவர் மருத்துவமனையில்

Mohamed Dilsad

Leave a Comment