Trending News

மாணவர்கள் சிலரை தாக்கிய சம்பவம்-பல்கலை மாணவர்கள் 13 பேர் கைது

(UTV|COLOMBO)-வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த 13 சிரேஷ்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட மாணவர்கள் உந்துருளிகளில் புதிய மாணவர்கள் இருந்த இடத்திற்கு வந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

 

Related posts

15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு முக்கிய வீதிகள்

Mohamed Dilsad

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

Mohamed Dilsad

FIFA 2018 வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த பிரான்ஸ்

Mohamed Dilsad

Leave a Comment