Trending News

அனைவரும் இணைந்து விவசாயத்துறையை வளப்படுத்த வேண்டும் – நஸீர் அஹமட்

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாணம் 70 சதவீதம் விவசாயத்தை நம்பியிருப்பதால் அனைவரும் இணைந்து விவசாயத்துறையை  வளப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் றஹ்மானியா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

பெரும்போக சிறுபோக நெற்செய்கை, சேனைப் பயிர்ச் செய்கை, கால் நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட ஏனைய விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட வாழ்வாதார பொருளீட்டல்களில் கிழக்கு மாகாண மக்கள் ஈடுபடுகின்றார்கள்.

எனவே, விவசாயத்தை மேலும் வளம்படுத்த வேண்டும். அதற்காக கிழக்கு மாகாண அமைச்சரவையிலே விவசாயத்துக்கு முன்னுரிமையளிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

An Adjournment Debate on E.T.I

Mohamed Dilsad

பாரீசில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு 20 ஆண்டு சிறை

Mohamed Dilsad

Nalaka de Silva further remanded

Mohamed Dilsad

Leave a Comment