Trending News

பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்

(UTV|COLOMBO)-பெரும்போக நெல் கொள்வனவை அடுத்த இரு வாரங்களுக்குள் ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், சம்பா நெல் 41 ரூபாவிற்கும் நாட்டரிசி 38 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இந்தநிலையில், பெரும்போக நெல் அறுவடை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அறுவடை செய்யப்பட்ட நெல்லைக் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான களஞ்சியசாலைகளைத் தயார்ப்படுத்தும் செயற்பாடுகளை நெல் சந்தைப்படுத்தல்சபை முன்னெடுத்துள்ளது.

 

 

 

 

 

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு

Mohamed Dilsad

Indian Air Force conducts 5-day exercise with Lankan Air Force

Mohamed Dilsad

Turkey local elections: Setback for Erdogan as his party loses capital – [IMAGES]

Mohamed Dilsad

Leave a Comment