Trending News

சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா

(UTV|INDIA)-2018-ம் ஆண்டில் இளைஞர்கள் கொண்டாடிய காதல் படம் ‘96’. பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். படம் பார்த்தவர்கள் பலரின் பள்ளிக்கால காதல் நினைவுகளைக் கிளறிவிட்டது. இந்த படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. தெலுங்கில் கடும் போட்டிக்கு இடையே தயாரிப்பாளர் தில் ராஜு ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார். தெலுங்கிலும் பிரேம் குமாரே இயக்க உள்ளார்.
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா கதாபாத்திரங்களில் நடிக்க பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக சர்வானந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷாவுக்கும் சமந்தாவுக்கும் போட்டி நிலவியது. திரிஷா போட்டியை விட்டு கொடுக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார்.
இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ‘96’ வெளியான போது, திரிஷாவின் நடிப்புக்கு பெரிய பாராட்டு தெரிவித்தார் சமந்தா. அதனைத் தொடர்ந்து ‘96’ படத்தை ரீமேக் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். தற்போது மனம் மாறி அவரே நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

Related posts

காலநிலை

Mohamed Dilsad

Romania qualify for 2019 Rugby World Cup as Spain suffer shock loss to Belgium

Mohamed Dilsad

Overseas travel ban on Namal lifted

Mohamed Dilsad

Leave a Comment