Trending News

தொடர்ச்சியாக குறைவடைந்து வரும் தேயிலை விலை…

(UTV|COLOMBO)-இலங்கைத் தேயிலையின் விலை தொடர்ச்சியாக குறைவடைந்து வருவதாக தேயிலை தரகர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

2017ம் ஆண்டு இந்த காலப்பகுதியில் 610 ரூபா 28 சதமாக நிலவிய தேயிலையின் விலை, நேற்று 536 ரூபா 69 சதமாக பதிவாகி இருகிறது.

இது 11 சதவீத விலை வீழ்ச்சியாகும்.

அதேநேரம் தேயிலை ஏற்றுமதி பெறுமதி 7 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இந்தக் காலப்பகுதியில் 63 பில்லியன் ரூபாய் பெறுமதியான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டபோதும், இந்த முறை 58.7 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஏற்றுமதியே இடம்பெற்றிருப்பதாகவும் தேயிலைத் தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

Related posts

கரவெட்டி பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம்

Mohamed Dilsad

கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு பூட்டு

Mohamed Dilsad

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Mohamed Dilsad

Leave a Comment