Trending News

சுரிநாம் ஜனாதிபதிக்கு சிறை தண்டனை

(UTVNEWS | COLOMBO) – சுரிநாம் நாட்டு தற்போதைய ஜனாதிபதி தேசி பவுட்டர்சுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள சிறிய நாடான சுரிநாம், 1975 ம் ஆண்டு நெதர்லாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது.

இந்நாட்டின் தற்போதைய அதிபர் தேசி பவுட்டர்ஸ் (வயது 74). 1980ஆம் ஆண்டு சுரிநாம் நாட்டில் ராணுவ ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது ஆட்சியை பிடித்த பவுட்டர்ஸ் தற்போது வரை சுரிநாம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். போதைப்பொருட்கள் வழக்கிலும் குற்றவாளி என நிருபிக்கப்பட்டுள்ள இவர் மீது கொலை வழக்குகளும் தொடரப்பட்டன.

1982 ஆம் ஆண்டு பவுட்டர்ஸ் ஆட்சியில் இருந்த போது அவரது எதிர்ப்பாளர்களான 15 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘டிசம்பர் கொலைகள்’ என அழைக்கப்படும் அந்த சம்பவத்தில் 13 பொது மக்கள் மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் என 15 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2007ஆம் ஆண்டு பவுட்டர்ஸ் மற்றும் 24 நபர்கள் மீது இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பவுட்டர்ஸ், கொலை நடந்த சமயத்தில் தான் வேறு இடத்தில் இருந்ததாகவும், தப்பிச்செல்ல முயன்ற காரணத்தால் அவர்கள் 15 பேரும் கொல்லப்பட்டார்கள் என தெரிவித்தார்.

விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த பின்னர், பவுட்டர்சுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இராணுவ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

Related posts

තොරතුරු කොමිෂමට සභාපතිවරයෙක් පත් කරන ලෙස ඉල්ලා ශ්‍රේෂ්ඨාධිකරණයට පෙත්සමක්

Editor O

புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றார்

Mohamed Dilsad

Top Chinese Communist Party office-bearers call on President

Mohamed Dilsad

Leave a Comment