Trending News

இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு

(UTV|COLOMBO)-நாட்டில் நீடிக்கும் நிலைமையை கருத்திற் கொண்டு இடைக்கால கணக்கறிக்கையின் அங்கீகாரத்திற்கு இடமளிக்கப் போவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் இதுதொடர்பாக தெரிவிக்கையில், நாட்டின் ஸ்திரத்தன்மை சீர்குலைவதை தடுப்பது அவசியம்.

இதன் காரணமாக இடைக்கால கணக்கறிக்கையை ஆட்சேபிக்க கூடாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கம் அடுத்த வருடத்திற்காக சமர்ப்பிக்கும் நிதி ஒதுக்கீட்டு பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதாக அவர் கூறினார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவும் கருத்து வெளியிட்டார்.

அரச தகவல் திணைக்களம்

 

 

 

 

Related posts

இன்று இரவும் ஊரடங்கு சட்டம்

Mohamed Dilsad

Trump to seek changes in visa program to encourage hiring Americans

Mohamed Dilsad

බදු ක්‍රමයේ වෙනසක්…? ; වාහන මිල ඉහළ ට

Editor O

Leave a Comment