Trending News

றம்புக்கனை காவற்துறை நிலைய தடுப்பு காவலில் இருந்த கைதிகள் தப்பி ஓட்டம்

(UTV|COLOMBO)-போதை பொருள் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு றம்புக்கனை காவற்துறை நிலைய தடுப்பு காவலில் வைக்பப்பட்டிருந்த 05 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று இரவே குறித்த சந்தேக நபர்கள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் றம்புக்கனை – குடாகம பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யவதற்காக றம்புக்கனை காவற்துறைக்கு தவிர்த்து மேலதிக காவற்துறை நிலையங்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

 

 

 

 

 

Related posts

Imported milk powder prices increased

Mohamed Dilsad

Severe traffic congestion at Ward Place

Mohamed Dilsad

காலநிலை

Mohamed Dilsad

Leave a Comment