Trending News

மஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவார் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.

இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் தனது பிரதமர் பதவியில் இருக்கும் வரை வேறொரு பிரதமரை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது போகும் என்பதால´ மஹிந்த ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அஅவர் கூறினார்.

நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விஷேட உரையொன்றை நிகழ்த்திவிட்டு அவர் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகுவார் என்று லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.

இதேவேளை மஹிந்த ரஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றிவிட்டு நாளை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ரஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் சிலர் சற்றுமுன்னர் பதவியேற்பு

Mohamed Dilsad

வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

Mohamed Dilsad

Bangladesh closes day 2 on 133/2

Mohamed Dilsad

Leave a Comment