Trending News

ரிசாத் பதியுதீனின் பாதுகாப்புக்காக இறக்காமம் சபையில் பிரேரணை நிறைவேற்றம்

(UTV|COLOMBO)-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னால் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இறக்காமம் பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளன.

இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் இப்பிரேரனையை சபையில் நேற்று  (11) சமர்ப்பித்து உரையாற்றினார்,

இதில் முஸ்லிம் சமூகத்தின் தேசிய அளவிலான தலைவராக றிசாட் பதியுதீன் மக்களால் பார்க்கப்படுகிறார். அ.இ.ம.கா கட்சி தற்போது மக்களின் ஆதரவை அதிகம் பெற்ற கட்சியாகவும், அதன் தலைவரான றிசாட் பதியுத்தீன் சிறந்த தலைவராக சமூகம் ஏற்று அரசியலில் பின்பற்றுகிறது.

எமது முஸ்லிம் சமூகத்தில் பல தலைவர்கள் இருக்கின்றார்கள் அவர்களின் பாதுகாப்பு பற்றி அக்கறை கொள்வது ஒவ்வொரு முஸ்லிம் மக்களினதும்
பொறுப்பாகும்.முன்னர் முஸ்லீம்களின் தேசிய தலைவரான மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களை மக்கள் பார்த்தனர்.

அரசியலில் மக்களின் நாட்டம் அவரினாலேயே ஏற்பட்டு இலங்கை அரசியலில் சிறந்த ஆட்சி அமைப்புக்கு, நல்லுறவுகளுக்கு ,சர்வதேச முஸ்லீம் நாடுகளின் இணைப்பை இலங்கையுடன் ஏற்படுத்துவதில் ,இலங்கைக்கு அதன் மூலம் பாரிய நன்மைகளை பெற்றுப்கொடுப்பதில் பாரிய பங்காற்றினார் .ஆனால் அவரின் சரியான பாதுகாப்பை அந்த அரசாங்கம் உறுதிப்படுத்த தவறியதால் முஸ்லீம் சமூகம் சிறந்த தலைவரை இழந்தது. இலங்கை சிறந்த தலைவரை இழந்தது.

அதே போன்று றிசாட் பதியுத்தீன் விடயத்தில் இந்த அரசாங்கம் பாராமுகமாக இருந்து விடக்கூடாது .இலங்கையின் அரசியலில் பாரிய பங்காற்றும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை ,முஸ்லீம் சமூகத்தின் தலைமைப்பொறுப்பை
ஏற்றுள்ள ஒரு தலவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்திடம் உள்ளது.ஜனாதிபதி இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தலைவருக்கு இந்நாட்டில் கொலை அச்சுறத்தல் வந்தும் அரசாங்கம் பாராமுகமாக இருந்தால் ,நாட்டின் தனிமனிதனின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்ற கேள்வி எழுகிறது.

தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகள் திட்டமிடப்பட்டு றிசாட் பதியுதீன் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டது வெறுமனே ஒரு மனிதருக்காக வந்த அச்சுறுத்தல் அல்ல ,இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனினதும் பாதுகாப்புக்கு வந்த கேள்வியாகும். ஜனாதிபதி இந்த விடயத்தனை உடனடியாக அக்கறை செலுத்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் ,உரிய சந்தேக நபர்களை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உப தவிசாளர் பிரேரனையில் அடங்கிய வியத்தை குறிப்பிட்டு பேச்சை முடித்தார்.இந்தப் பிரேரனை 11.12.2018 ம் திகதி இன்று நிறைவேற்றப்பட்டது, இதன் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் உப தவிசாளர் நெளபர் மெளலவி தெரவித்தார்.

ஊடகப்பிரிவு

 

 

 

 

 

Related posts

Tamil Nadu Chief Minister writes to Modi again on fishermen issue

Mohamed Dilsad

Over 80% voter turnout expected at Presidential Election

Mohamed Dilsad

ஜனாதிபதி நாளை நேபாளத்திற்கு விஜயம்

Mohamed Dilsad

Leave a Comment