Trending News

பொலன்னறுவையில் எலிக்காய்ச்சலால் 10 பேர் உயிரிழப்பு

(UTV|POLANNARUWA)-பொலன்னறுவை பகுதியில், எலிக் காய்ச்சலினால் கடந்த 3 வாரங்களுக்குள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள், எலிக் காய்ச்சலினால் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக
சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்கள், உரிய வகையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளாமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலன்னறுவை சுகாதார சே​வை பணிப்பாளர், டொக்டர் சரத் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், எலிக்காய்ச்சல் தொடர்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் டொக்டர் சரத் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

மண்சரிவு காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு

Mohamed Dilsad

மேலும் அதிகரிக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு

Mohamed Dilsad

2019 ஆஸ்கர் திரைப்பட விருது விழா– சிறந்த நடிகர், நடிகைக்கான விருது…

Mohamed Dilsad

Leave a Comment