Trending News

UPDATE-பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி 13 தரப்புக்களினால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

ஏழு நீதியரசர்களைக் கொண்ட ஆயம் முன்னிலையில் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை இந்த மனுக்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட உள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட 13 தரப்புக்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக இந்த மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக்  கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்து எதிர்வரும் 7 ஆம் திகதிவரை இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

Related posts

Khloe Kardashian plans to put down her phone

Mohamed Dilsad

ලංවීම අද සිට අකුරට වැඩ

Editor O

மைத்திரியை சந்திக்கவுள்ள ராஜபக்ஸவினர்

Mohamed Dilsad

Leave a Comment