Trending News

தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 50 பேர் பலி

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மதத் தலைவர்கள் கூடியிருந்தபோது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் குறைந்தது 83 பேர் காயமடைந்துள்ளனர்.

இது, அண்மைய மாதங்களில் காபூலில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும்.

ஆனால், குறித்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஆனால் அண்மைக் காலத்தில், ஐ.எஸ். மற்றும் தலிபான் அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இந்தத் தாக்குதலை தாம் நடத்தவில்லை என தலிபான் அமைப்பு மறுத்துள்ளது.

 

 

 

 

Related posts

க.பொ.த. சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

செயற்கை மழையின் முதற்கட்ட நடவடிக்கை அடுத்த வாரம்

Mohamed Dilsad

ரணில் விக்ரமசிங்க இன்று(16) பிரதமராக பதவியேற்பு

Mohamed Dilsad

Leave a Comment