Trending News

27 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட்டுக்களை கடத்தியவர்கள் கைது

(UTV|COLOMBO)-பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (19) அதிகாலை சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட ஒரு தொகுதி சிகரட்டுக்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரி சுனில் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேரையும் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மதுரங்குழி பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவர் எனவும், மற்றையவர் குளியாபிடிய பகுதியை சேர்ந்த 32 வயதுடைய வர்த்தகர் ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இருவரும் காலை 6.30 மணி அளவில் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த விமானத்தில் அவர்களின் பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சிகரட் தொகையை கொண்டு வந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இவர்களிடம் இருந்து 273 வௌிநாட்டு சிகரட் பெக்கெட்டுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 54,720 சிகரட்டுகள் அடங்கியுள்ளதாகவும் இவை சுமார் 2,730,000 ரூபா பெறுமதியுடையவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் பண்டிகை காலங்களில் அவற்றை விற்பனை செய்வதற்காக இந்த சிகரட்டுகள் இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

 

 

 

Related posts

கைக்குண்டு தாக்குதலில் நபரொருவர் பலி

Mohamed Dilsad

Scores injured in huge explosion in Japan

Mohamed Dilsad

முதல் நாள் முடிவில் 203 ஓட்டங்களை பெற்றது நியூஸிலாந்து

Mohamed Dilsad

Leave a Comment