Trending News

பாலித தெவரப்பெரும தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு?

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்திற்குள் கத்தி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று பொலிஸ் அவசர இலக்கத்துக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த கூறினார்.

நேற்று பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபஷ ஆற்றிய உரையின் நம்பகத்தன்மை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து பாராளுமன்றத்தில் அமைதியற்ற நிலை தோன்றியது.

இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருப்பது போன்ற காட்சிகள் ஊடகங்களில் வௌியாகியிருந்தன.

 

 

 

 

Related posts

වනිදු, 20 යි 20 නායකත්වයෙන් ඉල්ලා අස්වෙයි.

Editor O

Financial assistance from Kuwait Government to Sri Lanka

Mohamed Dilsad

திலங்க சுமதிபாலவுக்கு தற்காலிகத் தடை

Mohamed Dilsad

Leave a Comment