Trending News

இன்று(16) பயண கட்டணங்களை குறைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து பயண கட்டணங்களை குறைக்க முடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

பேருந்து தொழிற்துறையை நடாத்திச் செல்வதற்கான செலவீனங்கள் அதிகரித்துள்ளன.

இதன்காரணமாக பேருந்து பயண கட்டணங்களை குறைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பேருந்து பயண கட்டணங்களை குறைப்பது தொடர்பில் தமது நிறைவேற்றுக் குழு இன்று கூடி இறுதி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக அகில இலங்கை பேருந்து நிறுவனங்களின் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அதன் பிரதான செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப வாடகைக் கட்டணத்தை 60 ரூபாவில் இருந்து மீண்டும் 50 ரூபாவாக குறைக்க உத்தேசித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுயதொழில் சம்மேளனத்தின் தேசிய முச்சரக்கர வண்டி சங்க தலைவர் சுனில் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

June Industrial Production Index up 0.4-Pct in Sri Lanka

Mohamed Dilsad

Pedro goal gives Chelsea first-leg draw in Germany

Mohamed Dilsad

இந்திய இராணுவத்தின் உயரதிகாரி இலங்கைக்கு விஜயம்

Mohamed Dilsad

Leave a Comment