Trending News

நாளை முதல் அதிகரிக்கும் முச்சக்கர வண்டி பயணக் கட்டணங்கள்

(UTV|COLOMBO)-பெட்ரோல் விலை அதிகரிப்பிற்கு ஈடாக முச்சக்கர வண்டிகளது பயணக் கட்டணங்களும் நாளை(12) முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை சுய வேலை வாய்ப்பு ஊழியர்களது முச்சக்கர வண்டிகளது சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல் மாகாணத்தினுள் இரண்டாவது கிலோமீட்டருக்கான பயணக்கட்டணமானது 40 ரூபாவில் இருந்து 50 ரூபா வரையில் உயர்வடையும் எனவும் முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் 60 ரூபா கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என குறித்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

மத்திய மலை நாடு உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் 60 ரூபா கட்டணமானது 80 ரூபா வரையிலும், இரண்டாவது கிலோமீட்டர் முதல் அறவிடப்படும் கட்டணமானது 50ரூபாவில் இருந்து 60 ரூபா உயர்த்தப்படும் எனவும் குறித்த சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை அணியின் முகாமையாளராக சரித் சேனநாயக்க நியமிப்பு

Mohamed Dilsad

2018 – 2020 தெங்கு உற்பத்தித்துறையை மேம்படுத்த நடவடிக்கை

Mohamed Dilsad

Hemasiri to appear before Presidential Commission on Oct 18

Mohamed Dilsad

Leave a Comment