Trending News

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சந்திமலுக்கு இடமில்லை

(UTV|COLOMBO)-இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹொங் கொங் ஆகிய ஆறு நாடுகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 15 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இதற்கான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இலங்கை அணி தனது அணி வீரர்களை அறிவித்துள்ளது. இதில் விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான தினேஷ் சந்திமலுக்கு இடம் கிடைக்கவில்லை.

அண்மையில் நடைபெற்ற டி20 தொடரில் விளையாடும்போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், இந்த காயம் குணமடைய சில நாட்கள் தேவைப்படும் என்பதால் அவர் அணியில் இடம் பெறவில்லை எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக நிரோஷன் டிக்வெல்லா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் இம்முறை மெத்யூஸ், குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, திசர பெரேரா, தசுன் ஷனக, தனஞ்ஜெய டி சில்வா, அகில தனஞ்ஜெய, தில்ருவன் பெரேரா, அமில அபோன்சோ, கசுன் ரஜித, சுரங்க லக்மல், துஷ்மந்த சமீர, லசித் மலிங்க, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் போட்டித் தொடரில் கலந்துகொள்ள உள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Saudi Cabinet commends information agreement with France

Mohamed Dilsad

නීතිපතිගේ තීරණයක්, තාවකාලිකව අත්හිටුවයි

Editor O

“Teachers yet to be paid for paper marking” – Joseph Starling

Mohamed Dilsad

Leave a Comment