Trending News

கண்சிமிட்டும் நடிகையை கண்டித்த ரசிகர்கள்

(UTV|INDIA)-‘ஒரு அடார் லவ்’ மலையாள படம் மூலம் கண்ணடித்து காதல் விளையாட்டு நடத்திய பிரியா பிரகாஷ் வாரியர் ஒரே நாளில் ஒஹோ ஹீரோயின் ஆனார். இந்தகாட்சி இணைய தளம் மூலம் வைரலாகி பல மாதங்கள் ஆகியும் சில பிரச்னைகள் காரணமாக அப்படம் திரைக்கு வரவில்லை. இதனால் நொந்துபோன பிரியா வாரியர் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக கண்ணடித்த காட்சியில் நடித்தபோது இடம்பெற்ற ஒரு பாடலால் சர்ச்சையில பிரியா சிக்கினார்.

தற்போது மற்றொரு சர்ச்சையில் அவர் சிக்கியிருக்கிறார். சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல நடிகர், நடிகைகள் நிதியுதவி அறிவித்து வருகின்றனர். நடிகை பிரியா வாரியரும் தனது பங்குக்கு ரூ 1 லட்சம் கேரளா முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கினார்.

பின்னர் அதற்கான ரசீதை தனது இன்ஸ்டாகிராம் இணைய தள பக்கத்தில் வெளியிட்டு,’இந்த ரசீதை நான் இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதற்கு காரணம் பப்ளிசிட்டிக்காகவோ அல்லது நானும் நன்கொடை அளித்தேன் என்பதை வெளிப்படுத்துவற்காகவோ அல்ல.

இதைப்பார்த்து மற்றவர்களும் வெள்ள நிவாரணத்துக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே. இது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருந்தால் என்னை தாழ்வாக விமர்சிக்காதீர்கள்’ என குறிப்பிட்டுள்ளார். பிரியா வாரியரின் இந்த செயலை பலர் ரசிக்கவில்லை. பப்ளிசிட்டிக்காக இன்ஸ்டாகிராமில் ரசீதை வெளியிடவில்லை என்று சொன்னால் பிறகு ஏன் அதை வெளியிட்டீர்கள் என கண்டனம் தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Boxing will remain in Olympics: AIBA chief

Mohamed Dilsad

හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රී ලොහාන් රත්වත්තේ පළාත් පාලන මැතිවරණයට…?

Editor O

Premier Rajapaksa assumes duties as Finance Minister

Mohamed Dilsad

Leave a Comment