Trending News

படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு

(UTV|INDIA)-மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் பல கோலிவுட் இயக்குநர்கள் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தன.

இந்நிலையில், தற்போது ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்திற்கான திரைக்கதையை இயக்குனர் ஏ.எல்.விஜய் எழுதி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் அஜித் நடித்த கிரீடம், மதராச பட்டணம், சைவம் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் சாய்பல்லவி நடித்த ´தியா´ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

திரைக்கதை அமைக்கும் பணி முடிந்தவுடன் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கும் நடிகை குறித்து ஏ.எல் விஜய் முடிவு செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த கேரக்டரில் நடிக்க த்ரிஷா, கீர்த்திசுரேஷ், நயன்தாரா உள்பட முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று மொழிகளில் வெளியாக உள்ள ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் முதல் பாதி அவருடைய திரையுலக வாழ்க்கை குறித்து இரண்டாம் பாதி அரசியல் வாழ்க்கை குறித்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபிரி மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தின் அறிவிப்பு ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் திகதி வெளிவரும் என கூறப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

New initiative to properly distribute Government’s welfare benefits

Mohamed Dilsad

மஸ்கெலியாவில் காணாமல் போன அண்ணன் தங்கை சடலமாக மீட்பு

Mohamed Dilsad

Simon Cowell gets Hollywood Walk of Fame star

Mohamed Dilsad

Leave a Comment