Trending News

களுத்துறை படகு விபத்து:11 பேர் பலி:மேலும் 32 பேர் மருத்துவமனையில்

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை, கட்டுகுருந்த படகு விபத்தில் இதுவரையில் சிறுவர் ஒருவர் உட்பட 11 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது காணாமல்போன 32 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 26 பேர் பேருவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் களுத்துறை நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காணாமல் போன ஏனையவர்களை மீட்பதற்கான பணிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதற்காக 11 மீட்புப் பணியாளர்களும், 20 கடற்படையினரும் ஈடுபட்டுவருகின்ற அதேவேளை, பத்து படகுகளும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

அத்துடன் உலங்கு வானுர்தி ஒன்றின் மூலமாக கண்காணிப்பு உதவிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுவருவதாக வான்படையினர் தெரிவித்துள்ளனர்.

பேருவளை சென் லாசரஸ் தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் ஒன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், குறித்த தேவஸ்தானத்தை நோக்கி பயணித்த படகு ஊர்வலத்தின் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

Related posts

Zimmer, Faltermeyer to score “Top Gun 2”

Mohamed Dilsad

மகிந்த அணியின் மே தின கூட்டத்திற்கு சென்ற நபரொருவர் மாயம்

Mohamed Dilsad

இத்தாலியில் பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் 26 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment