Trending News

இராமநாதன் கண்ணன் என்பவர் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதை தடுக்க வேண்டும் – மஹிந்த

(UDHAYAM, COLOMBO) – ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவது நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு முரணானது என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றபோது அதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படுவதானது நீதிமன்ற சுயாதீனத் தன்மையை பாதுகாப்பதற்கான ஒழுங்குமுறையாக அமையும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இராமநாதன் கண்ணன் என்பவர் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தமது ஆட்சிக் காலத்தில் நீதித் துறையில் வெளிவாரி சட்டத்தரணிகள், நீதிபதிகளாக நியமிக்கப்படவில்லை என மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

“I believe in street cricket” – Brian Lara

Mohamed Dilsad

Brexit: Marathon makes EU eager to reach finish line

Mohamed Dilsad

Leave a Comment