Trending News

இராஜாங்க அமைச்சர்கள் இருவரும், பிரதியமைச்சர்கள் ஆறு பேரும் இன்று சத்தியப்பிரமாணம்

(UTV|COLOMBO)-இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 6 பிரதியமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை 9.00 மணியளவில் இந்த சத்தியப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேர், பிரதி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள உள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

அதன்படி, அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், சுற்றுலா, தொழிற்துறை மற்றும் வர்த்தக நடவடிக்கை, மாநகர மற்றும் மேல்மாகாண நகர அபிவிருத்தி ஆகிய அமைச்சுகளுக்காகவும், மேலும் ஒரு அமைச்சுக்காகவும் பிரதி அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுபோல் இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எவன்கார்ட் வழக்கு ஒத்திவைப்பு

Mohamed Dilsad

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு

Mohamed Dilsad

Third “Kingsman” set for November 2019

Mohamed Dilsad

Leave a Comment