Trending News

இன்று காலை பேருந்தொன்று கவிழ்ந்து விபத்து.

(UDHAYAM, COLOMBO) – இங்கிரிய மஹநுக பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று பாதையை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.

இன்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இங்கிரிய காவற்துறை தெரிவித்துள்ளது.

ஹொரணையில் இருந்து இங்கிரிய நோக்கி பயணித்த இந்த பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதைக்கு அருகில் உள்ள வயலில் கவிழ்ந்துள்ளதாக இங்கிரிய காவற்துறை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து இடம்பெறும் போது பேருந்தில் சாரதி மற்றும் நடத்துனர் மாத்திரம் இருந்துள்ள நிலையில், அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை.

எனினும் பேருந்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

மீண்டும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்குமாறு பௌசி வேண்டுகோள்

Mohamed Dilsad

සක්විතිට අධිකරණයෙන් දඬුවම් නියම කරයි.

Editor O

இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா

Mohamed Dilsad

Leave a Comment