Trending News

இறுதி போட்டிக்கு முன்னேறிய சென்னை

(UTV|INDIA)-ஐபிஎல் 2018 தொடரின் ‘Qualifier 1’போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் எம்.எஸ். டோனி நாணயசுழற்சியை வென்று களத்தடுப்பை தேர்வு செய்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் பில்லிங்ஸ் நீக்கப்பட்டு, ஷேன் வாட்சன் சேர்க்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

சன்சைரைசர்ஸ் அணி 20 ஓவர் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் பெற்றது. பிராத் வைட் 29 பந்தில் ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 43 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 140 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை அணி 140 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கியது.

பரபரப்பான போட்டியில் சென்னை அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. டு பிளசிஸ் 42 பந்துகளில் 67 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு கணிசமான பங்களிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத் சார்பில் சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ලෝක බැංකුවෙන් ශ්‍රී ලංකාවට ඩොලර් මිලියන 200ක්

Editor O

ஹஷீஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

Mohamed Dilsad

India register maiden Test series victory in Australia

Mohamed Dilsad

Leave a Comment