Trending News

சுதந்திரக் கிண்ண சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தெரிவு

(UTV|COLOMBO)-சுதந்திரக் கிண்ண சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் பங்களாதேஷை தோற்கடித்த இந்தியா இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

சுற்றுத்தொடரின் ஐந்தாவது போட்டி நேற்று கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 3 விக்கட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றது.

பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

இதன் பிரகாரம் இந்தியா 17 ஓட்டங்களால் வெற்றி பெற்று, ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

நாளை இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இது சுற்றுத்தொடரின் அரையிறுதிப் போட்டியாக அமையவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Myanmar donates 300 tonnes of rice to Sri Lanka flood victims

Mohamed Dilsad

INSYS 2017 நிகழ்வில் SLIIT மாணவர்கள் தமது புத்தாக்கமான திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்

Mohamed Dilsad

Batticaloa line train services back to normal

Mohamed Dilsad

Leave a Comment