Trending News

பொதுமன்னிப்புக் காலத்தில் சரணடையாத 2023 இராணுவத்தினர் கைது

(UTV|COLOMBO)-பொதுமன்னிப்புக் காலத்தில் சரணடையாத 2023 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த 24 ம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் 3 இராணுவ அதிகாரிகளும் 2 கெடெட் அதிகாரிகளும் 2019 ஏனைய உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பொதுமன்னிப்புக் காலத்தில் சரணடையாத இராணுவ பெண் அதிகாரி உள்ளிட்ட பெண் சிப்பாய்கள் 78 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இராணுவத்தினர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

One killed, another injured in shooting

Mohamed Dilsad

பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு இடமாற்றம்-பொலிஸ் தலைமையகம்

Mohamed Dilsad

US Peace Envoy meets Taliban Co-Founder

Mohamed Dilsad

Leave a Comment