Trending News

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அணிகள்

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் இடம்பெறும் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அணிகளின் விபரங்கள் தற்சமயம் அறிவிக்கப்படுகின்றன.

சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18ம் திகதி முதல் இடம்பெறவுள்ளது.

இலங்கை, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க அணிகள் விபரங்களை அறிவித்துள்ளன.

15 பேரை கொண்ட இலங்கை குழுவுக்கு அஞ்சலோ மெத்தியூஸ் தலைமை தாங்குகிறார். உபுல் தரங்க, நிரேஷன் திக்வெல்ல, குசல் பெரேரா, குசல் மென்டிஸ், சாமர கப்;புஹெதர, அசேல குணரட்ன, தினேஷ் சந்திமால், லசித் மாலிங்க, சுரங்க லக்மால், நுவான் பிரதீப். நுவான் குலசேகர, திசேர பெரேரா, லக்சான் சந்தகான், சீகுகே பிரசன்ன ஆகியோர் அணியில் இடம்பெறுகிறார்கள்.

இன்று அணிகளின் விபரங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

Related posts

212 Drunk drivers arrested within 24-hours

Mohamed Dilsad

மஹிந்தவின் நியூயோர்க் டைம்ஸ் விவகாரம் பாராளுமன்றத்தில் இன்று

Mohamed Dilsad

Stanley Tucci, Chris Rock join “The Witches

Mohamed Dilsad

Leave a Comment