Trending News

ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையே இன்று மாலை சந்திப்பு

(UTV|COLOMBO)- பொது தேர்தல் ஒன்றுக்கு செல்வது குறித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தலைவருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(18) மாலை இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானதை தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தலைவருக்கு இடையில் நேற்று(17) அலரி மாளிகையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று உருவாகவுள்ள நிலையில், அதற்கு வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கும் வகையில் விரைவில் பொதுத்தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கு அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினமும் கலந்துறையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பனிப்பாறைகள் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரிப்பு

Mohamed Dilsad

Auspicious times for Sinhala and Hindu New Year

Mohamed Dilsad

அமைதியான முறையில் தேர்தல்கள் இடம்பெற்று வருகின்றன

Mohamed Dilsad

Leave a Comment