Trending News

டி10 தொடரில் விளையாடவுள்ள மெத்யூஸ்

(UTV|COLOMBO) – அபுதாபியில் இடம்பெறவுள்ள டி10 தொடரானது எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த தொடரில் டெல்லி பூல்ஸ் அணிக்காக இலங்கை அணியின் சகலதுறை வீரரான எஞ்சலோ மெத்யூஸ் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் நபி மற்றும் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் உள்ளிட்ட சர்வதேச வீரர்களுடன் எஞ்சலோ மெத்யூஸ் இணைக்கப்பட்டுள்ளதாக குறித்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளமிங் தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்லி பூல்ஸ் அணிக்காக இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Lara discharged from Mumbai hospital

Mohamed Dilsad

ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

Mohamed Dilsad

டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயம்

Mohamed Dilsad

Leave a Comment