Trending News

விமானத்தில் விரிசல் – நிறுத்தி வைக்கப்பட்ட 50 விமானங்கள்

(UTV|COLOMBO) – ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த க்வாண்டாஸ் விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் குறித்த ரக விமானங்களை பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

737 NG ரக விமானங்களின் சிறகு அருகே விரிசல்விட வாய்ப்புள்ளதாக போயிங் விமானத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளதால் உலக அளவில் பல்வேறு விமான நிறுவனங்கள் தங்கள் வசம் உள்ள 737 NG விமானங்களை சோதனைக்கு உட்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

விமானத்தின் உடல் பகுதியுடன் சிறகை இணைக்கும் ‘பிக்கில் ஃபோர்க்’ எனும் பகுதியில் விரிசல் உண்டாகலாம் என்று போயிங் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 737 NG ரகத்தைச் சேர்ந்த 50 விமானங்கள் உலகெங்கும் விமான சேவைக்கு உட்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஏ.எஃப். பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

Related posts

பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வேண்டுகோள்…

Mohamed Dilsad

NGOs influence our education system in subtle ways – PM

Mohamed Dilsad

Arsonist kills neighbours fleeing fire

Mohamed Dilsad

Leave a Comment