Trending News

குப்பைகளைக் கூட்டிப் பெருக்கிய ஜே.வி.பி பா.உறுப்பினர்கள்; ஆதரவை மேலும் அதிகரிப்பு(photo)

(UTVNEWS|COLOMBO) -மக்கள் விடுதலை முன்னணி தலைமைத்துவத்தின் கீழ் உள்ள தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் எல்லோரும் அறிந்த விடயமாகும் அதன் பின்னர் நடந்த விடயங்கள் தான் மீண்டும் ஒரு தடவை மக்கள் விடுதலை முன்னணியை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அந்த கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள் கலைந்து சென்ற பின்னர் காலிமுகத்திடலில் இருந்த குப்பைகளை பிமல் ரத்நாயக்க துடைப்பக்கட்டையுடன் கூட்டிப் பெருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெறத் தொடங்கியுள்ளதுடன் ஜே.வி.பிக்கான மக்கள் ஆதரவை மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த பணியில் அக் கட்சியை சார்ந்த பலர் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்பாடு அனைவரினதும் பாராட்டை பெற்றுவருகின்றது.

நேற்றைய தினம் இலங்கை வரலாற்றில் முன்னணிக் கட்சியாக அங்கீகாரம் பெறாத கட்சியொன்றினால் ஒன்றுதிரட்டப்பட்ட ஆகக்கூடிய ஜனத்திரள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இ.போ.சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

Mohamed Dilsad

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

ஶ்ரீபாத கல்வியற்கல்லூரி சம்பவம் தொடர்பில் விசாரணை

Mohamed Dilsad

Leave a Comment