Trending News

நான் ஜனாதிபதி ரணில் பிரதமர் -சஜித்

(UTVNEWS | COLOMBO) -கடந்த ஒக்டோபர் மாதம் அரசியல் சூழ்ச்சியின்போது நானே ஜனாதிபதி வேட்பாளர் என்று கட்சியின் தலைவர் எனக்கு வாக்குறுதி தந்திருந்தார். என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நானே களமிறங்குவேன். அதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவே களமிறங்குவார்.”

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் கட்சியைத் துண்டாக்க நான் விரும்பவில்லை. கட்சியைவிட்டு வெளியேறும் எண்ணமும் எனக்கில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் எனது தந்தை உயிரையே அர்ப்பணித்துள்ளார். எனவே, கட்சிக்குத் துரோகமிழைக்க நான் விரும்பவில்லை.

அதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் தானே மீண்டும் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாகவும் அவர் அப்போது என்னிடம் தெரிவித்திருந்தார்.

Related posts

மாத்தறை கொள்ளைச் சம்பவம் – வாகனத்துடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

UNP suspends Wasantha Senanayake’s party membership

Mohamed Dilsad

பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

Mohamed Dilsad

Leave a Comment