Trending News

அபூர்வமான வெள்ளை நிற டொல்பினை பார்த்துள்ளீர்களா?..படுவைரலாகி வரும் வீடியோ

(UTVNEWS | COLOMBO) – டொல்பின் என்று சொன்னவுடன், வழவழவென கருப்பு நிறத்தில் வேகமாக நீந்தும் உயிரினம். ஆனால், வெள்ளை நிறத்திலும் டொல்பின் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?.

வெள்ளை நிறத்தில் இருக்கும் டொல்பினின் வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது.கேப்டன் பால் கீட்டிங் என்பவர், பிக்டன் பகுதியில் இ-கோ (E-Ko) டூர்ஸ் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அவர் சமீபத்தில் தனது படகில் கடல் உயிரினங்களை காண்பிக்க சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளார். அப்படி பயணிகளை அழைத்துச் செல்லும்போதுதான் அபூர்வமான வெள்ளை நிற டொல்பின் கண்ணில் பட்டுள்ளது. கீட்டிங்கின் மகள், அந்த அபூர்வ டொல்பினுக்கு ‘கோஸ்ட்’ என்று பெயர் வைத்துள்ளார்.

மேலும் இது குறித்த வீடியோவை இ-கோ டூர்ஸ் நிறுவனம், தனது யூடியூபில் பகிர்ந்துள்ளது. “கோஸ்ட், மிகவும் அபூர்வமான தென்படும் வெள்ளை டொல்பின் இனத்தைச் சேர்ந்தது” என்று வீடியோவுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு, அபூர்வமான அல்பினோ டால்பினின் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவியது. அதைப் போன்ற தற்போது வெள்ளை டால்பின் வீடியோவும் பரவிவருகிறது.

Related posts

Speaker warns Parliamentarians

Mohamed Dilsad

Indian Policeman lynched in Kashmir

Mohamed Dilsad

“no room for foreign judges” – President

Mohamed Dilsad

Leave a Comment