Trending News

இலங்கைப் பணியாளர்களுக்கு 14 துறைகளின் கீழ் ஜப்பானில் தொழில்?

(UTV|COLOMBO) இலங்கைப் பணியாளர்களுக்கு 14 துறைகளின் கீழ் ஜப்பானில் தொழில்களைப் பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நாளைய தினம் கைச்சாத்திடப்படவுள்ளது,வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஜப்பானின்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்குமிடையில் ஜப்பானில் வைத்து இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தமானது 10 வருடங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் இந்த காலப்பகுதியில் அதிகமான இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு கிடைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 நாடுகளுக்கு ஜப்பான் இந்த தொழில்வாய்ப்பை வழங்கவுள்ளதுடன் இதில் 7ஆம் இடத்தில் இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்துக்கமைய, தாதியர், கட்டடங்களை பராமரித்தல், இயந்திர தொழிற்றுறை, இலத்திரணியல் துறை, தொடர்பாடல் துறை, கட்டுமாணம், போக்குவரத்து மற்றும் பராமரிப்பு, மின்னணுத்துறை, கப்பற்றுறை, விமானத்துறை, விவசாயம், மீன்பிடித்துறை, உணவுப் பொருள்கள் உற்பத்தி உள்ளிட்ட துறைகளிலே இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

Six suspects arrested for heroin distribution

Mohamed Dilsad

Monthly fuel price revision today

Mohamed Dilsad

எதிர்வரும் மே மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதி

Mohamed Dilsad

Leave a Comment