Trending News

சைபர் தாக்குதல் வெளிநாட்டுக் குழுக்களால் முன்னெடுப்பு

(UTV|COLOMBO) அண்மையில் இடம்பெற்ற இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரக இணைத்தளம் உள்ளிட்ட 13 இணையத்தளங்கள் அண்மையில் சைபர் தாக்குதலுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

சைபர் தாக்குதலானது, வௌிநாட்டைச் சேர்ந்த இரு குழுக்களால் முன்னெடுக்கப்பட்டதாக, தகவல்கள் வௌியாகியுள்ளன.

கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலானது ஒரு குழுவினராலும் 19ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலானது மற்றுமொரு வௌிநாட்டுக் குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டதாக, கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையத்தளங்களில் 99 வீதமானவை, வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்  சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதனூடாக எவ்விதத் தரவுகளையும் தாக்குதல்தாரர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.ஒன்றியத்தின் நிறைவேற்று அதிகாரி லால் டயஸ் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் இணையத்தங்களைப் பாதுகாப்பது தொடர்பில் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 

Related posts

பஸ் கட்டணங்களை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தை இன்று

Mohamed Dilsad

සමගි ජන බලවේගයෙන් පාර්ලිමේන්තුවට නම් කළ අලුත් මන්ත්‍රීවරයාගේ නම ගැසට් කරයි

Editor O

வாக்களிப்பு மத்திய நிலையங்களில் விசேட கண்காணிப்பு

Mohamed Dilsad

Leave a Comment