Trending News

வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில்…

(UTV|COLOMBO) அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு செலவுத் திட்டம் இன்று(05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று(05) பிற்பகல் பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.

மக்களை வலுப்படுத்துதல், வறிய மக்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை முதன்மையாகவும் அடிப்படை கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்தில் இம்முறை வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 4,550 பில்லியன் ரூபாவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வருமானமாக 2,400 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன் இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை நிகர தேசிய உற்பத்தியில் சுமார் 4.5 வீதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் இம்மாதம் 06 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் மார்ச் மாதம் 13 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி மாலை வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

 

 

 

 

Related posts

வோர்ட் பிளேஸ் பகுதியில் பாரிய வாகன நெரிசல்

Mohamed Dilsad

ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பிலிருந்து விலக தீர்மானம்

Mohamed Dilsad

Ethanol worth Rs. 13 million seized in Ja Ela

Mohamed Dilsad

Leave a Comment