Trending News

இந்தியா தேவையற்ற போருக்கு அழைப்பு விடுத்துள்ளது – பாகிஸ்தான் எச்சரிக்கை

(UTV|PAKISTAN)-இந்தியாவின் தாக்குதலை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் வெளியுறவுத்துறை அமைச்சினால் நேற்று(26) தேசிய பாதுகாப்பு கூட்டம் கூட்டப்பட்டு அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.

குறித்த கூட்டத்தின் பின்னர் தேசிய பாதுகாப்பு பிரிவினால் இன்று(27) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

“இந்தியா நடத்திய தாக்குதலில் சுமார் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது உண்மையல்ல. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். பொறுப்பற்ற முறையில் இந்தியா மீண்டும் கற்பனை கதையை அவிழ்த்து விட்டுள்ளது.

அந்த வகையில், இந்தியாவின் அமைதி மற்றும் ஸ்திரதன்மைக்கு ஆபத்து ஏற்படுத்துவதை உணராமல். பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உலக ஊடகவியலாளர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு வந்து பார்வையிட்டால், என்ன நடந்தது என்ற உண்மை தெரியவரும்.

இந்தியா தேவையற்ற போருக்கு அழைப்பு விடுத்துள்ளது. பதில் தாக்குதலுக்கான இடத்தை பாகிஸ்தான் தேர்வு செய்து வருகின்றது. உரிய நேரத்தில் தகுந்த இடத்தில் பதிலடி கொடுக்கப்படும்”

இந்த தாக்குதல்களினால் எல்லைப் பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து, ஐ.நா., உள்ளிட்ட அமைப்புகளில் முறையிட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டத்தை கூட்டி இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும் என்றும், நாட்டை பாதுகாக்கும் வகையிலும், இந்தியா நடத்திய தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுக்கவுள்ளோம். இந்நிலையில் என்ன வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் நடக்கலாம், எதற்கும் தயாராக இருங்கள்’ என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இராணுவத்தினரையும் பொதுமக்களையும் எச்சரித்திருந்ததாக குறித்த றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், அமைச்சக அதிகாரிகள், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

Sri Lanka warned after media no-show

Mohamed Dilsad

නයයෑම් සහ ජලගැලීමෙන් ඉන්දුනීසියාවේ 708 දෙනෙක් ජීවිතක්ෂයට

Editor O

பரீட்சைகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது

Mohamed Dilsad

Leave a Comment