Trending News

காலநிலை மாற்றம்…

(UTV|COLOMBO)-தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுவதுடன், மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளையில் பல தடவைகள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் வடமேல் மாகாணம், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையில் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

 

 

 

 

 

Related posts

Keheliya, Mahinda to hold new Government’s first presser today

Mohamed Dilsad

அமைச்சர் ரிஷாதிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையானது அரசியல் பொறாமை என்பது தெளிவாக தெரிகிறது – இராஜாங்க அமைச்சர் அப்துல் மஹரூப்

Mohamed Dilsad

கே.டி.லால் காந்தவை பிணையில் விடுவிக்கக் கோரி இன்று மனு

Mohamed Dilsad

Leave a Comment