Trending News

பெட்ரோல் விலை உயர்வு

(UTV|INDIA)-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இடையிடையே சிறிதளவு மட்டுமே குறைக்கப்பட்டது. ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90 ரூபாயை எட்டியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

5 மாநில தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விலை குறையத் தொடங்கியது. கடந்த 57 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையானது சிறிது சிறிதாக குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பெட்ரோல் விலை சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது.  சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்துள்ளது. நேற்று 72.82-க்கு விற்கப்பட்ட பெட்ரோல் இன்று ரூ.72.94 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 3 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி டீசல் லிட்டருக்கு ரூ.68.26-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோல் ரூ.70.20, டீசல் ரூ.64.66, மும்பையில் பெட்ரோல் ரூ.75.91, டீசல் ரூ.67.66, கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.72.38, டீசல் ரூ.66.40, ஐதராபாத்தில் பெட்ரோல் ரூ.74.55, டீசல் ரூ.70.26, பெங்களூருவில் பெட்ரோல் ரூ.70.86, டீசல் ரூ.65.00 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

Related posts

Met. Dept. forecasts rain after 2.00 PM

Mohamed Dilsad

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

Mohamed Dilsad

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…

Mohamed Dilsad

Leave a Comment