Trending News

சட்டமா அதிபரிடம் தீர்ப்பை தாமப்படுத்தாமல் வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை…

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பை தாமப்படுத்தாமல் வழங்குமாறு ஜனாதிபதி கோரவுள்ளார்.

சட்ட மா அதிபர் ஊடாக ஜனாதிபதி இன்று பிரதம நீதியரசரிடம் இந்த கோரிக்கையை முன்வைப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து, பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு அறிவிப்பு திகதி குறிப்பிடப்படாமல் கடந்த வெள்ளிக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது.

அத்துடன் பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்புக்கு விடுக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை, தீர்ப்பு அறிவிக்கும் வரையில் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Supreme Court issues Interim Order against implementing death penalty

Mohamed Dilsad

Turkey captures sister of dead IS leader in raid

Mohamed Dilsad

மழையுடனான வானிலை

Mohamed Dilsad

Leave a Comment