Trending News

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (07) நான்காவது நாளாக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

04 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விசாரணைகளின் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த மனுக்கள் மீதான தனது தரப்பு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இந்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று நேற்று முன்தினம் நீதிமன்றில் தெரிவித்தார்.

 


பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற உள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை இன்றைய தினமும் மீண்டும் விசாரிப்பதற்கும், குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு நாளைய தினம் வரை தடை உத்தரவை நீடித்தும் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உட்பட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு வருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

Related posts

நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு

Mohamed Dilsad

Protests in Pakistan’s Kasur after boys’ bodies found

Mohamed Dilsad

SpaceX puts up Sixty internet satellites

Mohamed Dilsad

Leave a Comment