Trending News

ஹெரோயின் தொகையுடன் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO)-ஒரு கோடியே 20 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட ஹெரோயின் தொகையுடன் கெஸ்பேவ பகுதியில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 கிலோ 10 கிராம் எடைகொண்ட குறித்த ஹெரோயின் தொகையை அவர் மகிழுந்து ஒன்றில் கடத்திச் செல்லும் போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் இருந்து மேலும் 60 லட்சத்து 94 ஆயிரத்து 820 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில்700 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட மாணிக்க கற்களை கொள்ளையிட்ட குழு ஒன்றின் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் மிரியானை குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுக்க – வட்டெரக்க பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானார்.

Related posts

Anura Senanayake granted bail in Thajudeen case

Mohamed Dilsad

சாதாரண தர மாணவர்களை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட கோரிக்கை

Mohamed Dilsad

තංගල්ල ප්‍රදේශයේ නිවසක් තුළ මළ සිරුරු 02ක්

Editor O

Leave a Comment