Trending News

ஒஸ்கார் வரலாற்றில் இப்படி ஆகிவிட்டதே!

(UDHAYAM, LOS ANGELES) – சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு மூன்லைட் படம் தேர்வாகி இருந்த நிலையில், லா லா லேண்ட் படம் விருது பெற்றதாக தவறுதலாக அறிவிக்கப்பட்டது.

89ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடந்தது. இதில் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு லா லா லேண்ட் படம் தேர்வு செய்யப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், உண்மையில் மூன் லைட் படமே சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதில், லா லா லேண்ட் திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளையும், மூன் லைட் படம் 3 ஆஸ்கர் விருதுகளையும், ஹாக்ஸா ரிட்ஜ் படம் 2 ஆஸ்கர் விருதுகளையும் வென்றன.

Related posts

நடுவரின் இருக்கையை சேதப்படுத்திய பிரபல டென்னிஸ் வீராங்கனை

Mohamed Dilsad

மீற்றர் பொருத்தப்படாத முச்சக்கரவண்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் அமுல்

Mohamed Dilsad

Gayle rested, Walton recalled for Bangladesh T20Is

Mohamed Dilsad

Leave a Comment