Trending News

காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதி

(UDHAYAM, COLOMBO) – கடந்த புதன்கிழமை இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் நேற்று (வியாழக்கிழமை) மாலை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த விமல்ராஜ் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவதற்காக கொழும்பிலிருந்து 5 விசேட பொலிஸ் குழுக்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 20 பேருக்கு மேற்பட்டோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல மட்டங்களில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

Related posts

ஜெயம் ரவியுடன் டூயட் பாடும் காஜல்

Mohamed Dilsad

Sri Lanka set export target of USD 20 billion by 2020

Mohamed Dilsad

Johnston Fernando further remanded until tomorrow

Mohamed Dilsad

Leave a Comment