Trending News

ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கேபின் அழுத்தத்தால் பயணிகளின் மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் வழிந்தது

(UTV|INDIA)-மும்பையில் இருந்து இன்று காலை ஜெய்ப்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 166 பயணிகளுடன் புறப்பட்டது. டேக் ஆப் ஆன சிறிது நேரத்திலேயே மீண்டும் மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. பயணிகள் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் திடீர் பரப்பரப்பு ஏற்பட்டது.

விமானம் புறப்படும் போது, விமான கேபின் அழுத்தத்தை பராமரிக்கும் சுவிட்சை ஆன் செய்ய விமான சிப்பந்தி மறந்துவிட்டதால், அதிக அழுத்தம் காரணமாக 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காது மற்றும் மூக்கு வழியாக இரத்தம் வழிந்துள்ளது. சில பயணிகளுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மும்பை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. விமானத்தினுள் உள்ள காற்றின் அழுத்தத்தை பரிசோதிக்காமல் விமானத்தை இயக்கியதே பயணிகளின் உடல் உபாதைகளுக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Ukraine official charged over acid killing

Mohamed Dilsad

President congratulates the new UN Envoy on Youth

Mohamed Dilsad

ஜமால் கசோகி மிகவும் ஆபத்தானவர்!

Mohamed Dilsad

Leave a Comment