Trending News

நாய்-பூனை கறிகளுக்கு தடை- மீறினால் 3 லட்சம் அபராதம்

(UTV|AMERICA)-நாய்களும், பூனைகளும் மனிதர்களிடம் நண்பர்களாக பழகுகின்றன. எனவே அவை செல்லப் பிராணிகளாக வீட்டில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் சீனாவில் ஆண்டு தோறும் 1 கோடிக்கும் மேற்பட்ட நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. அவற்றை மனிதர்கள் சாப்பிடுகின்றனர். அதே போன்று பல்லேறு நாடுகளில் பூனைகளும் இறைச்சிக்காக கொல்லப்படுகிறது.

இதை தடுக்கும் வகையில் அமெரிக்காவில் நாய்கள் மற்றும் பூனைகள் கறிக்கு (இறைச்சிக்கு) தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்டம் அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழ் அவையில் நேற்று முன்தினம் நிறை வேற்றப்பட்டது.

இதற்கு நாய் மற்றும் பூனை கறி தடை சட்டம் 2018 என பெயரிடப்பட்டுள்ளது. மீறி அவற்றை கொன்று கறி விற்பனை செய்தால் ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இது தவிர நாய் மற்றும் பூனை கறி விற்பனைக்கு தடை விதிக்கும்படி சீனா, தென் கொரியா, இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் வலியுறுத்தி மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தில் பெண் எம்.பி. கிளாடியா பேசினார். அப்போது இந்த சட்டத்தின் மூலம் அமெரிக்காவின் மதிப்பு உலக நாடுகளில் பிரதிபலிக்கும். செல்லப் பிராணிகள் மீதான கொடூர தாக்குதல் தடுத்து நிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவில் வாழும் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பங்களில் நாய் மற்றும் பூனைகளை வளர்க்கின்றனர். இவற்றை கொன்று இறைச்சி சாப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற தகவல் இந்த சட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மற்றொரு எம்.பி. வெர்ன்பு சானன் பேசினார்.

இதற்கிடையே செல்ல பிராணிகளின் பாதுகாப்பு சட்டங்களுக்கு விலங்குகள் நல அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

කොළඹ නගරාධිපති සමගි ජන බලවේගයෙන්.

Editor O

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வட மத்திய பாடசாலைகளுக்கு விடுமுறை

Mohamed Dilsad

சாவித்திரியின் வாழ்க்கை படத்தால் பிரிந்தது குடும்பம்

Mohamed Dilsad

Leave a Comment