Trending News

’96’ தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது யார் தெரியுமா?

(UTV|INDIA)-முதல்முறையாக விஜய்சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்த திரைப்படமான ’96’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்றது. இந்த டீசரில் விஜய் சேதுபதி – த்ரிஷா இருவரும் படத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அவர்களுக்கு பின்னால் ஒலிக்கும் பாடல் அவர்கள் பேச விரும்புவதை அப்படியே நமக்கு புரிய வைத்ததே இந்த படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு காரணம்.

விஜய்சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் இம்மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் தில்ராஜூ பெற்றுள்ளதாகவும், இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் விஜய்சேதுபதி கேரக்டரில் நானியும், த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் குறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என தெரிகிறது.

’96’ படத்தில் வைல்ட்லைப் போட்டோகிராபர் கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இந்த படம் 16, 36 மற்றும் 96 வயதில் உள்ள காதல் குறித்த கதையம்சம் கொண்டது என கூறப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை – அவுஸ்திரேலியா T20 தொடர் நாளை ஆரம்பம்

Mohamed Dilsad

Sri Lanka to re-launch ‘free Visa on arrival’ service

Mohamed Dilsad

New Sri Lanka Map to be launched tomorrow

Mohamed Dilsad

Leave a Comment