Trending News

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வண்டுகள்,புழுக்கள் அடங்கிய போஷாக்கு உணவு பொதிகளை வழங்கிய கொடூரம்

(UDHAYAM, COLOMBO) – மொனராகலை தம்பகல்ல பிரதேசத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கும் இலவச போஷாக்கு உணவு பொதிகளில் வண்டுகள் மற்றும் புழுக்கள் இருப்பதாக பிரதேசவாசிகள் தம்பகல்ல காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்படி காவற்துறையினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து நேற்று இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது அந்த விற்பனை நிலையத்தில் இருந்த நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு பொருட்கள் மற்றும் போஷாக்கு உணவு பொதிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

உணவு பொருட்களை பொது சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றிய நிலையில், விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளார்.

Related posts

Change in dry weather from today

Mohamed Dilsad

President rejects No-Confidence Motion against Mahinda Rajapaksa, Cabinet

Mohamed Dilsad

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோட்டாபய ராஜபக்ஷ

Mohamed Dilsad

Leave a Comment